ஊரக புத்தாக்க திட்டம் குறித்து தொழில்முனைவோர்கள் மற்றும் சமுதாய அமைப்புகளோடு திட்ட விளக்க கூட்டம்

ஊரக புத்தாக்க திட்டம் குறித்து தொழில்முனைவோர்கள் மற்றும் சமுதாய அமைப்புகளோடு திட்ட விளக்க கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர்  திருமதி மு.விஜயலட்சுமி, இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------திட்டம் குறித்து தொழில்முனைவோர்கள் மற்றும் சமுதாய அமைப்புகளோடு திட்ட விளக்க கூட்டம்; மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மு.விஜயலட்சுமி, இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்ததாவது:-


கிராமப்புறங்களில் தொழில் வளர்ச்சிக்கு ஏற்ற சூழல்களை உருவாக்கி தொழில் வாய்ப்புக்கான, தொழில் வகைகளுக்கான ஆய்வுகளை மேற்கொண்டு, மக்கள் பங்கேற்புடன், லாபம் தரத்தக்க ஊரக தொழில்களை கண்டறிதல் மற்றும் ஏற்கனவே இயங்கிவரும் ஊரக தொழில்களை வலுப்படுத்தி இயங்க வைத்தல், புதிய உற்பத்தி பொருட்களுக்கான சந்தை வாய்ப்புகளை கண்டறிதல், தொழில் வளர்ச்சிக்கான அடிப்படை சேவைகளை வழங்குதல், தொழில்களில் நிலைத்த தன்மையை உருவாக்கிட வழிகாட்டுதல், இத்திட்டத்தின் முக்கிய நோக்கமாகும்.


இத்திட்டம் நான்கு கூறுகளை உள்ளடக்கி உள்ளது. ஊரக தொழில்முனைவுக்கு ஏற்ற சுழலை மேம்படுத்துதல், தொழிலுக்கான திட்ட நிதி வழங்குதல், தொழிலுக்குத் தேவையான பணியாளர்களை உருவாக்குவதற்காக திறன் வளர்ப்பு மற்றும் வேலைவாய்ப்புகள், திட்ட மேலாண்மை ஆகியவன ஆகும்.


இத்திட்டத்தின் மூலம் சுயஉதவிக்குழுக்களின் குழு உறுப்பினர்கள், குடும்ப உறுப்பினர்கள், பெண்கள், மாற்றுத்திறனாளிகள், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினத்தவர்கள் ஆகியோருக்கு முன்னுரிமை அளித்து ஊரக தொழில் முனைவோர்களை உருவாக்கி, நிதி சேவைகளை வழங்கி, இதன் மூலம் வேலைவாய்ப்பினை உருவாக்குதலாகும். 


தொழில்களுக்கு கடனுதவி வழங்கும் வங்கிகளுக்கு, கடன் தொகையில் 30 சதவீதம் நிதித்திட்டத்தின் மூலம் விடுவிக்கப்பட்டு, வங்கி இருப்பில் வைக்கப்படும். கடன் பெற்ற நபர் அல்லது குழுக்கள் கடன் தொகையில் 70 சதவீத கடன் தொகையை திருப்பி செலுத்திய பின்னர் மீதமுள்ள 30 சதவீத தொகை திட்ட நிதியில் இருந்து வங்கிக் கடனுக்கு ஈடாக செலுத்தி எஞ்சிய கடன் தொகையினை செலுத்துவதில் இருந்து விலக்கு பெற முடியும். இத்திட்டம் முதற்கட்டமாக 74 கிராம ஊராட்சிகளிலும், இரண்டாம் கட்டமாக 74 கிராம ஊராட்சிகளிலும் செயல்படுத்தப்படவுள்ளது.



(2)
இத்திட்டத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட ஊராட்சி ஒன்றியங்களில் உள்ள வேளாண் சார்ந்த மற்றும் வேளாண் சாரா துறைகளைச் சார்ந்த உற்பத்தியாளர்கள் இணைந்த குழு அல்லது கூட்டமைப்பு அல்லது தொழில் முனைவோர்கள் ஆகியோர் இத்திட்டத்தின் மூலம் பயன்பெறலாம் என திண்டுக்கல் மாவட்ட ஆட்சித்தலைவர்; திருமதி மு.விஜயலட்சுமி, இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்தார்.


இக்கூட்டத்தில் மாவட்ட ஊராட்சி தலைவர் திரு.பாஸ்கரன், ஆத்தூர் ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர் திருமதி எம்.மகேஸ்வரி, தமிழ்நாடு ஊரக புத்தாக்கத் திட்ட மாவட்ட செயல் அலுவலர் திரு.ஜெயப்பிரகாஷ், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் திரு.சுப்பிரமணியன், திரு.சீத்தாராமன், ஊரக புத்தாக்க திட்ட செயல் அலுவலர்கள்; திருமதி சசிரேகா, திரு.சி.தங்கபாண்டி உட்பட பலர் கலந்துகொண்டனர்.



-----------------------------------------------------------------------------------------------------------------------------------------
 ----------------------------------------------------------------------------------------------------------------------------------------