புனித தோமையர் மலை பகுதியில் காணாமல் போன குழந்தையை விரைவாக கண்டுபிடித்து தாயிடம் உதவி ஆய்வாளர் ஒப்படைத்தார்.

 
புனித தோமையர் மலை  பகுதியில்  காணாமல் போன குழந்தையை  விரைவாக  கண்டுபிடித்து  தாயிடம்  உதவி ஆய்வாளர்  ஒப்படைத்தார்.
 சென்னை, புனிததோமையர்மலை, பட்ரோடு, மாங்காளியம்மன் கோயில் தெரு, என்ற முகவரியில் பாஞ்சாலி, வ35/, க/பெ.ராஜேஷ் என்பவர் வசித்து வருகிறார். நேற்று (26.01.2020) காலை சுமார் 11.00 மணியளவில் மேற்படி பாஞ்சாலியின் 5 வயது ஆண்குழந்தை  வீட்டருகே விளையாடிக்கொண்டிருந்த போது காணாமல் போயுள்ளது. உடனே பாஞ்சாலி அவசர  தொலைபேசி எண்   100  மூலம் காவல் கட்டுப்பாட்டு அறையை தொடர்பு கொண்டு தகவல் தெரிவித்துள்ளார்.   காவல் கட்டுப்பாட்டு அறை போலீசார்  புனித தோமையர் மலை ரோந்து வாகனத்தில் பணியிலிருந்த உதவி ஆய்வாளர் திருமதி.A. இந்திராவை தொடர்பு கொண்டு தகவல் தெரிவித்துள்ளனர்.
   S-1 புனித தோமையர் மலை காவல் நிலைய  ரோந்து வாகன பொறுப்பு உதவி ஆய்வாளர் திருமதி.இந்திரா விரைந்து சம்பவயிடத்திற்கு சென்று விசாரணை செய்து தீவிரமாக குழந்தையை தேடும் பணியில் ஈடுபட்டு, சிறிது நேரத்தில் புனித பேட்ரிக் தேவாலய வளாக படிக்கட்டு அருகில் அழுது கொண்டிருந்த மேற்படி காணாமல் போன 5 வயது ஆண் குழந்தையை மீட்டு, குழந்தையின் தாயான பாஞ்சாலியிடம் பத்திரமாக ஒப்படைத்தார்.
  விரைந்து செயல்பட்டு காணாமல் போன குழந்தையை சுமார் 1 மணி  நேரத்தில் கண்டுபிடித்து குழந்தையின் தாயிடம் ஒப்படைத்த உதவி ஆய்வாளர்                                     திருமதி.இந்திராவை (94981- 30630) சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு.அ.கா.விசுவநாதன்,  இ.கா.ப  அவர்கள் வெகுவாக பாராட்டினார்.