கொடைக்கானல் சன் லயன்ஸ் சார்பில் லயன்ஸ் முன்னாள் மாவட்ட ஆளுநர்கள் மாதக் கொண்டாட்டம். நிகழ்வில் கல்வி உதவித் தொகையை சன் லயன்ஸ் சங்க பட்டயத்தலைவர் டி.பி.ரவீந்திரன் வழங்கினார்.
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் சன் லயன்ஸ் சங்கம் சார்பில் முன்னாள் மாவட்ட ஆளுநர்கள் மாதக் கொண்டாட்டம் நடைபெற்றது. சிறப்பு விருந்தினர்களாக முன்னாள் லயன்ஸ் சர்வதேச இயக்குநர் வழக்கறிஞர் தனபாலன், இரண்டாம் நிலை துணை ஆளுநர் மணிகண்டன் மற்றும் 10-க்கும் மேற்பட்ட முன்னாள் மாவட்ட ஆளுநர்கள் கலந்து கொண்டனர். இந்நிகழ்வில் சிவகங்கை, தேனி, திண்டுக்கல் மாவட்டங்களைச் சேர்ந்த (324-B 3) லயன்ஸ் சங்க நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். கொடைக்கானல் சன் லயன்ஸ் சங்கத் தலைவர் கிரண் ரவீந்திரன், செயலாளர்கள் அப்பாஸ், திரவியம், பொருளாளர் ஜெரால்டுராஜா, முன்னாள் தலைவர்கள் ஆஷாரவீந்திரன், செந்தில்குமார், அருண் ரவீந்திரன் ஆகியோர் அனைவரையும் வரவேற்றனர். இவ்விழாவில் பட்டயத் தலைவர் டாக்டர். .டி.பி.ரவீந்திரன் கொடைக்கானல் புனித ஜான்ஸ் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் ஏழ்மை நிலையில் தங்களது கல்வியை தொடர்ந்து பயில முடியாத மாணவிகளின் கல்வித் திறனை அறிந்து அவர்கள் இடைநில்லாமல் கல்வியை தொடர அப்பள்ளி தலைமையாசிரியரிடம் ஒரு லட்சத்து என்பதாயிரத்திற்கான காசோலையை வழங்கினார். மேலும் கூலி வேலை செய்து தனது படிப்பை தொடர தன் தாயாரால் முடியாத நிலையில் அதனை அறிந்து சன் லயன்ஸ் பட்டயத் தலைவர் அந்த மாணவிக்கு சட்டக்கல்லூரி படிப்பை தொடர நாற்பதினாயிரத்திற்கான காசோலையை வழங்கினார். காசோலை பெற்ற மாணவி கௌசல்யா கூறும் போது தனக்கும் தன் சகோதரிக்கும் பட்டயக் கனவு தகர்ந்து விடுமோ என நினைத்த நிலையில் சன் லயன்ஸ் பட்டயத் தலைவர் எங்களின் உயர் தரக் கல்விக்கு தொடர்ந்து உதவி செய்து வருவதாகவும் என்னைப் போல் பல கஷ்டப்படும் மாணவிகளுக்கு தொடர் கல்வி உதவித் தொகை வழங்கி உதவி வரும் அவரை கல்வித் தந்தையாக கருதுவதாக தெரிவித்தார். இந்நிகழ்வில் கொடைக்கானல் சன் லயன்ஸ் சங்க தலைவர் டி.பி.ரவீந்திரன் முன்னிலையில் சன் லயன்ஸ் சங்க சேவையும், பசுமையும் இரு கண்கள் என்ற புத்தகம் வெளியிடப்பட்டது. சர்வதேச லயன்ஸ் சங்க முன்னாள் தென்னிந்திய லயன்ஸ் சங்க இயக்குநர் வழக்கறிஞர் தனபாலன் புத்தகத்தை வெளியிட தென்னிந்திய லயன்ஸ் சங்க ஒருங்கிணைப்பாளர் பாண்டியராஜன் , மாவட்ட இரண்டாம் நிலை துணை ஆளுநர் மணிகண்டன் ஆகியோர் பெற்றுக் கொண்டனர்.