தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் ஆணைக்கிணங்க, மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.சி.கதிரவன் இஆப., அவர்கள் கொரோனா வைரஸ் நோய் தொற்று தடுப்பு நடவடிக்கையினை போர்க்கால அடிப்படையில் மேற்கொண்டதில், பெருந்துறை, ஈரோடு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கொரோனா வைரஸ் நோய் தொற்று அறிகுறி காரணமாக தனிமைப்படுத்தப்பட்டு, கண்காணிக்கப்பட்டு வந்த நபர்களில் 14 நபர்களை நலமுடன் அவர்களது இல்லத்திற்கு (09.04.2020) அனுப்பி வைத்தார்ஆணைக்கிணங்க ஈரோடு மாவட்டத்தில் .
இந்நிகழ்வில் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.சி.கதிரவன் இஆப., அவர்கள் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது, மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் ஆணைக்கிணங்க, ஈரோடு மாவட்டத்தில் கொரோனா வைரஸ் நோய் தொற்று தடுப்பு தொடர்பாக பல்வேறு நடவடிக்கைகள் போர்கால அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டது. ஈரோடு மாநகராட்சி, கோபிசெட்டிபாளையம், சத்தியமங்கலம் மற்றும் ஒரு சில பகுதிகளில் நோய் தொற்று அறிகுறிகள் கண்டறியப்பட்ட நபர்களை உடனடியாக மருத்துவக் குழுக்களைக் கொண்டு பெருந்துறை, ஈரோடு அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் கொரோனா சிறப்பு பிரிவு ஏற்படுத்தப்பட்டு அங்கு அனுமதிக்கப்பட்டனர். ஈரோடு மாவட்டத்தில், 89 நபர்களில் அவர்கள் அனுமதிக்கப்பட்ட நாள் அன்று இரத்த மாதிரிகள் ஒருமுறையும், 14-ம் நாள் நாள் முடிவில் 2-ம் முறையும் இரத்த மாதிரிகள் எடுக்கப்பட்டு ஆய்விற்கு அனுப்பி வைக்கப்பட்டது. அதில் 28 நபர்களுக்கு கொரோனா வைரஸ் நோய் தொற்று உறுதி செய்யப்பட்டு அவர்களுக்கு பெருந்துறை, ஈரோடு அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
மேலும் கொரோனா வைரஸ் நோய் தொற்று அறிகுறி காரணமாக தனிமைப்படுத்தப்பட்டு, கண்காணிக்கப்பட்டவர்களில் 14 நபர்களுக்கு உடல் நலம் சீராக இருப்பது மருத்துவர்களால் உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து, இன்று (09.04.2020) அவர்களது இல்லத்திற்கு அனுப்பி வைக்கப்படுகின்றனர். எனவே பொதுமக்கள் ஊரடங்கை பின்பற்றி வீட்டிலேயே இருக்க வேண்டும். மேலும் நோய் தொற்று அறிகுறி இருப்பவர்கள் உடனடியாக அரசு மருத்துமனையை அணுகி மருத்துவர்களின் வழிகாட்டுதலை பின்பற்றினால், கொரோனா வைரஸ் நோய் தொற்றில் இருந்து தங்களை பாதுகாத்துக் கொள்ளலாம் என தெரிவித்தார்.