கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பாக நிகழ்விட தலைமையர் 2020 நாள்:09.04திண்டுக்கல் மாவட்டம் தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பாக நிகழ்விட ஆய்வுக்கூட்டம்

திண்டுக்கல் மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பாக நிகழ்விட தலைமையர் (Incident Commander) மற்றும் வட்டாட்சியர்களுக்கான காணொளி(ZOOM) மூலம் ஆய்வுக்கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மு.விஜயலட்சுமி, இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் இன்று (09.04.2020) நடைபெற்றது.


நோய் தொற்று கண்டறியப்பட்ட பகுதிகளில் கொரோனா வைரஸ் கட்டுப்பாட்டு திட்டம் (Containment Plan) செயல்படுத்துதலை உறுதி செய்ய வேண்டும். மாவட்டம் முழுவதும் 144 ஊரடங்கு உத்தரவு அமல்படுத்துதலை முழுமையாக கண்காணிக்க வேண்டும். மாநில பேரிடர் நிவாரண நிதி செலவு விபரம் மற்றும் புதிய நிதி துேவை இருப்பின் அதுகுறித்த விபரங்களை உடனடியாக தெரிவிக்க வேண்டும். அத்தியாவசியப் பொருட்கள் (காய்கறி, மளிகை மற்றும் மருந்துப் பொருட்கள்) நகர்வு அல்லது அனுமதி சீட்டு வழங்குதலில் புதிய நடைமுறைகள், அத்தியாவசிய சேவைகள்(வங்கி, அஞ்சல்) இயங்குவதை உறுதி செய்தல் வேண்டும்.


வெளிமாநில தொழிலாளர்கள் தங்குமிடம் மற்றும் உணவு மற்றும் இதர வசதிகள் மற்றும் வெளி மாநிலத்தில் தங்கியிருக்கும் தமிழ்நாட்டுத் தொழிலாளர்கள் விபரங்களை சேகரிக்க வேண்டும். தன்னார்வ தொண்டர்கள், உதவி செய்ய தயாராக உள்ளோர் விபரம் குறித்து சேகரிக்க வேண்டும். மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் பொது நிவாரண நிதி குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்துதல் வேண்டும்.


வட்ட அலுவலக கட்டுப்பாட்டு அறையை செயல்பாட்டிற்கு கொண்டு வருதல் வேண்டும். வருவாய்த்துறை மற்றும் பிற துறை அலுவலர்களின் மனிதவளம் முழுமையாக பயன்படுத்துதல் வேண்டும். முதியோர் உதவித்தொகை இல்லங்களிலேயே வழங்கப்படுவதை நிகழ்விட தலைமையர் (Incident Commander) மற்றும் வட்டாட்சியர்கள் உறுதி செய்ய வேண்டும் என திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் திருமதி.மு.விஜயலட்சுமி அவர்கள் அறிவுறுத்தினார்.


இந்த ஆய்வின்போது, மாவட்ட வருவாய் அலுவலர் திரு.ச.கந்தசாமி, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் திரு.ராஜ்குமார் மற்றும் அலுவலர்கள் உடன் இருந்தனர்.